Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.

Saturday, March 9, 2013

(பகுதி -8 )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -8 )(20 -பாடல்கள் )
தாயை இழந்த குழந்தை
# நடந்த அந்த அதிர்ச்சியில் இருந்து சிறிது சிறிதாக இயல்புநிலைக்கு வருவதற்கு ராதாவின் தங்கை கீதா எந்த நேரமும் குழந்தையுடன் இருந்து அவளின் தாயைப்போலவே பார்த்துக்கொண்டால், எந்த கவலையும் இன்றி சிரித்து விளையாடும் மகளைப்பார்த்த அவனின் மனம் சட்று நிம்மதி அடைந்தது அப்போது நமது வானொலியில் இந்த பாடல் ஒலித்தது ...பாட்டு- சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ ....
#இறந்துபோன தன் மனைவியை நினைத்துகொண்டிருந்த அவனில் காதில் வானொலியின் இந்த பாட்டு கேட்டது -பாட்டு அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாலே நான் பார்த்தபோது கண்களிரண்டில்
#இரவில் அவள் நினைவில் அவனுக்கு தூக்கம் வரவில்லை அப்போது வானொலியில் இந்த பாட்டு கேட்டது #பாட்டு :-ஆகாயத்தில் தொட்டில் கட்டும் Aagayathil Thottil Kattum திரைப்படம் - துணிவே துணை, பாடல் - கவியரசர் கண்ணதாசன்
# அப்போது தனது மகள் தூக்க கலக்கத்தில் அம்மா வேணும் என அழ, எப்பபாரு அம்மா வேணும் அம்மா வேணும்னா நான் எங்க போவேன் என்று கூறி கோபத்தில் குழந்தைய அடித்துவிட்டார், குழந்தை அழுவதை பார்த்தவனுக்கு அவனின் மனைவி இருந்திருந்தால் குழந்தையை சமதனப்படுத்தியிருப்பால், மனம் தனது குழந்தையை சமாதானப்படுத்த நினைத்தது :- பாட்டு தென் பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே மான்போல வந்தவளை யார் அடித்தாரோ. உடனே அங்கு வந்த மனைவியின் தங்கை கீதா குழந்தையை தூக்கிக்கொண்டு இப்படி பாடினால் பாட்டு #Chinna pappa enga chella pappa_Vannakili, சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா, சொன்னபேச்சு கேட்டக்க நல்லபாப்பா.
#அழுகை நின்று சமாதனமகியும் அழுத முகத்துடன் இருந்த தனது மகளிடம் சென்று அவளை தூக்கி அணைத்துக்கொண்டான், அப்போது மகள் பிரிய "அப்பா நீங்க அழாதீங்க உங்களை நான் அம்மாபோலவே நல்லா கவனித்துக்கொள்வேன் என்றால் Movi-Samsara Sangeetham -பாட்டு -உனக்கு கண்ணாய் நான் இருக்க எனக்கு கண்ணாய் நீ இருக்க என் ஆசை அப்பாவே நீ கொஞ்சம் அழுவதே
இனி வருந்திக்கொண்டிருப்பதால் எந்தபயனும் இல்லை என்று மனதை தேற்றிக்கொண்டு தான் பெற்றெடுத்த குழந்தையை நன்கு வளர்க்கவேண்டிய பொறுப்பு இருப்பதை உனர்ந்தான். பாட்டு ;-#Kadavul Thantha Azhagiya Vazhvu ..movie Mayavi - Surya, Jyothika, கடவுள் தந்த அழகிய வாழ்வு, உலகம் முழுதும் அவனது வீடு , கண்கள் மூடியே வாழ்த்துகள் பாடு http://youtu.be/3vDex9pMKdE
குழந்தையால் எனக்கு ஆறுதலா, அல்லது என்னால் குழந்தைக்கு ஆறுதலா? #K J YESUDAS TAMIL MELODY SONG CHINNA CHINNA ROJA(POOVIZHI VASALILE)சத்யராஜ்--சின்ன சின்ன ரோஜா பூவே
தனது பென்குசந்தை அருகே வந்து அப்பா கதை சொல்லுங்க என்றால் ;- பாட்டு:- என்ன கதை சொல்ல சொன்னAnna Nagar Muthal Theru
#Araro Ariraro - Siruthai ஆராரோ ஆரிரரோ
#RAJAMAGAL ROJAMAGAL-PILLAI NILAA ILAYARAJA MOHAN , ராஜாமகள் ரோஜாமகள் வானில் வரும் வெண்ணிலா
#மந்திரபுன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே http://youtu.be/RaSPGjXKpAc
நாட்கள் ஓடிச்சென்றன #பாட்டு துள்ளி திரிந்ததொரு காலம் படம் Enrum Anbudan ,
#உறவினர்கள் ஒன்றுகூடி பேசினார்கள், அக்கா ராதாவின் இடத்திற்கு அவளது தங்கை கீதாதான் சரியாக வரும் ஆகவே இரண்டாவது திருமண வேலைகளை பார்க்க சொல்லுங்க என்றனர். அதைக்கேட்ட கீதாவின் அதிர்ந்து போனால் அவளின் மனம் இப்படிப் பாடத்தொடங்கியது :- Karpura Bommai - Keladi Kanmani ..தாய் அன்பிற்கே ஈடேதம்மா..ஆகாயம் கூட அது போதாது.. தாய் போல யார் வந்தாலுமே..உன் தாயை போல அது ஆகாது
# அனைவரும் குழந்தையிடம் இந்த் அம்மா உனக்கு பிடிச்சிருக்க என கேட்டனர், அதை கேட்ட கீதாவிர்க்கு கோபம் கோபமாக வந்தது பிறகு அவள் குழந்தை பிரியாவை தனியே அழித்துசென்று இப்படி பாடினால் கொஞ்சி கொஞ்சி பேசி - Konji konji pesi
# ..தனது ஆக்கவின் இடத்தில் தன்னை வைத்து பேசுகிறார்களே என்று கீதா அதிர்ந்து போனால்.. குழந்தை பிரியவும் தன்மீது மிகவும் பிரியமாக இருக்கிறாள் .... பலப்பல சிந்தனைகளுடன் குழந்தை தன மடியில் தூங்குவதைக்கண்ட அவள் மனம் பாடியது..பாட்டு :- சின்ன தாய் அவள் தந்த ராசாவே, புல்லில் தோன்றிய ரோசாவே ..

நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

No comments:

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.