Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.

Saturday, March 9, 2013

(பகுதி 4- )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி 4- )(20 -பாடல்கள் )

நானும் (சுந்தர வடிவேலு), எனது நண்பனும் கிருஷ்ணனும் எப்போதும் இணைந்தே இருப்போம் 2 ம் வகுப்பிலிருந்து நண்பர்கள், ஒன்றாகவே டித்து வருகிறோம்,#Dosth bada Dosth - Saroja தோஸ்து படா தோஸ்து , தோச்துக்கில்லை வாஸ்து, தற்போது நாங்கள் 12 ம் வகுப்பில் படிக்கிறேன் எங்களுக்கு அது முக்கியமான வருடம் என்பதாலும் அதிக மதிப்பெண் எடுத்தால்தான் கல்லூரியில் நாங்கள் எதிர்பார்க்கும் பாடப் பிரிவில் இடம் கிடைக்கும் ஆகவே படிப்பில் அதிக கவனம் வைத்து படித்துவந்தோம், (#song-Mustafa Mustafa dont worry - Kadhal Desam) - அன்று எங்களது பள்ளியின் நேர அட்டவணைப்படி முதல் வகுப்பு தமிழ்... மாணவ மாணவியர் அனைவரும் தமிழ் அய்யா அவர்களின் வருகைக்காக காத்திருந்தோம். இன்று அரையாண்டு பரீட்சை விடைத்தாள்கள் அனைத்து மாணவர்க்கும் வகுப்பில் வழங்கப்படும், ....பின் வரிசையில் ஒரு சிலருக்கு ஏன்டாப்ப பள்ளிக்கு வந்தோம் என்றும், மற்றும் பலருக்கு சற்று பயம் கலந்த இறுக்கமான சுழலில் இருப்பது போல், அமைதியாக ஆசிரியரின் வருகைக்காக காத்திருந்தோம்("Oru Nanban Iruntha" from movie "Enakku 20 Unakku 18")
நானும் எனது நண்பனும் எப்போதும் இணைந்தே இருப்போம், நாங்கள் உட்காருவது வகுப்பின் முதல் வரிசை, வகுப்பின் பாதியளவு மாணவிகளின் வரிசைக்கு அடுத்த சற்று இடைவெளிவிட்டு எங்களின் வரிசை ஆரம்பம், நாங்கள் தேர்வை நன்கு எழுதி இருந்ததால் மிகுந்த மகிழ்ச்யுடன் ஆசிரியரின் வருகையை எதிர்ப்பார்த்து அமர்ந்திருந்தோம், எங்களுக்கு முதல் மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் அவ்வப்போது மாணவிகள் பக்கம் கண்கள் திரும்பிப்பார்க்க, முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்ததுSong .(Song-Manamea Manamea,Movie-Autograph)....ஸ்டைலாக சற்று சட்டை காலரை உயர்த்தலாமா? வேண்டாம்..வேண்டாம்...முதலில் விடைத்தாள் கையில் வரட்டும் பிறகு பார்த்துகொள்ளலாம். (இந்த மாணவிகள் ஆசிரியரிடம் அழுது மன்றாடி தமது மதிப்பெண்களை சற்று உயர்த்திக்கொண்டு அதனால் முதலிடத்திற்கு முன்னேரிவிடுகின்றனர்... இருக்கட்டும், இந்தமுறை நாமும் முயற்சிப்போம், முதலிடம் நமக்குதான் ) #(Movie-April Mathathil, song-Manasae Manasae)
தமிழ் அய்யா வகுப்புக்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி அமர்ந்தோம், வகுப்பை ஒரு முறை சுற்றிப்பார்த்த ஆசிரியர், நான் இன்னும் உங்களது அரையாண்டு விடைத்தாள்களை திருத்தவில்ல என்றார், அனைவரிடமிருந்தும் ஒரு பெருமூச்சு வெளிவந்தது. அப்போது ஆசிரியர் எனது நண்பன் கிருஷ்ணாவை அழைத்து எங்கள் வகுப்பின் அரையாண்டு விடைத்தாள் கட்டை அவனிடம் தந்து, உங்கள் வகுப்பின் அனைத்து விடைத்தாள்களையும் நியே திருத்தி, சரியான மதிப்பெண் வழங்கி, நாளைக்குள் திரும்ப என்னிடம் ஒப்படைக்கவேண்டும், வடிவேலையும் உனக்கு உதவியாக சேர்த்துக்கொள் என்று கூறு, அவருக்கு வேறுவேலை இருப்பதாக உடனே வகுப்பை விட்டு சென்றுவிட்டார். (செல்வதற்கு முன் எங்களிடம் "கவனமாகவும் வகுப்பில் ஒருவரும் குறை சொல்லாத அளவில் சரியாக விடைத்தாள்கள் திருத்தப்படவேண்டும் என கட்டளையிட்டார் )#movie Kulir 100 sung by சிம்பு, மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என்னுயிர் தோழா.
அவ்வளவுதான் வகுப்பில் அனைவரது கண்களும் எங்கள் பக்கம் திரும்ப, நாங்கள் மிகப்பெரிய உருவம் பெற்றதுபோல், காற்றில் மிதக்கலானோம். (song-Indha Nimidam -Movie Pallikoodam)
இப்படி ஓர் வாய்ப்பா? சற்றுநேரம் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை... அரையாண்டு விடைத்தாள் கட்டு எங்கள் கையில் வந்தபோது மிகப்பெரிய பொறுப்பு வந்துவிட்டதுபோல் உணர்ந்தோம். சில மாணவிகள் எங்கள் பக்கம் ஓடி வந்து, நாங்கள் இந்த தமிழ் உரைநடை பாட நூலின்படி தேர்வு எழுதிள்ளோம், ஆகவே நீங்கள் எங்களது விடைத்தாள்களை இதைபார்த்து படித்து திருத்துங்கள் என்றார்கள், இன்னும் சிலர் வேறு பல உரைநடை விடைத்தாள் நூலையும் தந்து கவனமாக திருத்தும்படி கூறினார்கள். கையிலும், மனதிலும் மிக அதிக கணம் நிரம்பியது போல் உணர்தோம். (அன்று இரவுமுழுதும் தூங்காமல் பெருமுயற்சியின் விளைவாக ஏற்றுக்கொண்ட பணியை முடித்தோம் )(Movi-Nanban - Nalla Nanban)
மறுநாள் திருத்திய விடைத்தாள் கட்டுக்களுடன், சரியாக பள்ளிமனியாடிக்கும்போதுதான் வகுப்புக்குள் நுழைந்தோம். வழக்கம்போல ஆசிரியர் தமிழ் அய்யா வகுப்புக்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி அமர்ந்தோம். தமிழ் அய்யா அழைபதற்கு முன்பே நாங்கள் அவரிடம் சென்று திருத்திய விடைத்தாள்களை தந்தோம்.
ஆசிரியர் ஒவொருவராக பெயர் கூறி அழைத்து விடைத்தாளை வழங்கினார். எங்களது பெயர் கூப்பிட்டதும் நாங்களும் எங்களது விடைத்தாளை பெற்றுக்கொண்டோம். நாங்கள் எங்களுடைய விடைத்தாளை திறந்து பார்க்காமல் மற்றவர்களின் முகங்களைத்தான் பார்த்தவண்ணம் இருந்தோம். பெற்றுக்கொண்ட அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது ( மதிப்பெண்களை வாரி வழங்கியிருப்பதால் நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் (actor vikaram-Movi Dhil-Oh Nanbane Nanbane) எனக்கும் என் நண்பனுக்கும் சற்று வருத்தமே, காரணம் நாங்களே எங்களுக்கு முதல் மதிப்பெண் போட்டுக்கொண்டால் சரியாக இருக்காது என்பதால் இந்தமுறை வகுப்பில் இரண்டாவது மற்றும் முன்றாம் நிலைக்கான மதிப்பெண்தான் பெறமுடிந்தது மேலும் அதிகப்படுத்த முடியாத தர்மசங்கடமான நிலை) இருந்தும் வகுப்பின் அனைத்து விடைத்தாள்களும் எங்களால் திருத்தப்பட்டது என்கிற பெருமை எண்களின் மனம் முழுவதும் பரவிக்கிடந்தது.(Nanban song என் பிரெண்டை போல யாரு மச்சான் )
அன்றைய பாட வகுப்பு முடிந்ததும், தமிழ் அய்யா எங்கள் இருவரையும் தனியே வகுப்புக்கு வெளியே அழித்துசென்று "கிருஷ்ணா, வடிவேல் நீங்கள் இருவரும் நன்கு படிப்பவர்கள், அனாலும் சென்றமுறை நீங்கள் சற்று குறைவான மதிப்பெண் எடுத்து சற்று கவனக்குறைவாக இருந்தீர்கள், எனவேதான் உங்களை வகுப்பின் அனைவரது விடைத்தல்களையும் திருத்தும்படிக்கூறினேன், நீங்களும் கவனமாக விடைத்தாள்களை திருத்தியதால் இனி உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்களை மறக்கமாட்டீர்கள். மாறாக நான் உங்களுக்கு வினதாளுக்கான விடையை நுருமுறை அபராதமாக எழுத சொல்லியிருந்தால் நீங்கள் நிச்சயம் செய்திருக்க மாட்டீர்கள், அப்படி செய்திருந்தாலும் அது உங்கள் மனதில் பதிந்திருக்காது எனவேதான் இப்படி செய்தேன்" என்று கூறிக்கொண்டே போனார் ... எங்களுக்கு ஆசிரியர் கீதை உபதேசம் செய்வதுபோல இருந்த்தது, எங்களது பெருமை என்ற மிகப்பெரிய மாயா உருவம், அடங்கி , ஒடுங்கி மிகச்சிறிய அளவு உருவமாக மாறியதுபோல வெட்கி தலைகுநிந்தோம் # வாழ்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் Poompuhar - Vaazhkai Enum Odam by K.B Sundarambal
"இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும் கூட!" (வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த மாபெரும் கலைஞன் சார்ளி சாப்ளினின் இந்த மந்திரச் சொல், நம் வெற்றிக்கும் நல்ல சாவி!) பாட்டு :- #வாழ்ந்து பார்க்கவேண்டும் அறிவில் மனிதராகவேண்டு TMS & BP SRINIVAS- Sivaji Ganesan & S.S.R - Vaazhnthu Paarkkavendum - Santhi - http://youtu.be/YU-b1hNh0g0
#பள்ளியின் இறுதிநாள் எங்கள் வகுப்பில் இருந்த அனைவருக்கும் பிரிவை எண்ணி மனம் கனத்தது பாட்டு :- ஒ மனமே ஒ மனமே உள்ளிருந்து அழுவது  ஏன் ....மழையை தானே யாசித்தோம்... கண்ணீர் துளிகளை தந்தது யார் -ullam ketkume- composed by harris jayaraj
#இப்போது நாங்கள் கல்லூரிக்கு வந்துவிட்டோம் இருந்தும் பழைய ஞாபகங்கள் (Autograph Nyabagam varudhe song)
# காலங்கள் மாறினாலும் எங்களுக்கு ஒவொரு பாடலிலும் ஒவொரு நினைவிருக்கும் பாடல் :-ஒவொரு பாடலிலும் ஒவொரு நினைவிருக்கும்
#கல்லூரி எங்கலின் மனதிற்கு ஒரு புதிய உற்சாகம் ஓடியது நாங்கள் துள்ளி குதித்தூம் பாட்டு:- ரோமியோ ஆட்டம் போட்டால் சுற்றும் பூமி சுற்றத்தோ Mr.Romeo-Romeo Attam
எத்தனை எத்தனை பாடல்கள் நாம் நண்பனைப்பற்றி நினைக்கும் பொது #Movie Name : Ninaithale Inikkum Song : Nanbanai partha,Singers : Benny Dayal, Chorus Cast : Prithviraj, Karthik Kumar, Sakthi Vasu, Priyamani, Srinath, Bhagyaraj,
நட்பிற்கு எல்லைதான் உண்டோ :-#Natpukkulae Song from Chennai 600028.
கல்லூரியின் ஒவொரு நிமிடமும் எங்களுக்கு கொண்டாட்டம் தான் #Movie Name : Chennai 600028 Song : Jalsa Pannungada Singers : Ranjith, Tippu, Premji Amaran, Haricharan & Karthik.
எத்தனை வருடங்கள் நண்பர்களாக இருந்து இங்கு கல்லூரியில் காதலால் அந்த நட்பு பிரியும் பொது மனம் வருந்தத்தானே செய்கிறது #Oru nanbanin kathai ithu from movie sattam. Cast kamal Hasan, Music by Gangai amaran, sung by SPB
இப்படியும் சில நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் #Movie -Shimlaspecial - kamalahasan-Yaar yaaro nanpan endru...Unakkenna mele ninraai o nandalalaa.
#கல்லூரியில் இப்படி ஒரு தோழி கிடைத்தால் :- தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சஞ்சிகனும் - singer சித்ரா, Movie-Paandavar Bhoomi
கல்லூரி என்றாலே அது ஒரு கூட்டமான கொண்டாட்டம் தானே #Eshwara Vaanum Mannum - Prashant, Karan & Vivek - Kannethirey Thondrinal
# நண்பன் என்றாலே அது இடம், பொருள், உயர்வு, தாழ்வு, போன்றவற்றிற்கு முற்றிலும் அப்பாற்ப்பட்டது எங்கு பார்த்தாலும் "நண்பன்டா" Vaada Nanbane - Poomagal Oorvalam Singer(s) : Unni krishnan, Music By Shiva - Poomagal ஊர்வலம்
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

No comments:

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.