Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.

Saturday, March 9, 2013

(பகுதி -10 )

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் விடுகதை (or) சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி -10 )(14 -பாடல்கள் )
விஷயம் தெரிந்த கிருஷ்ணனும் அவனின் தங்கை மற்றும் நண்பன் வடிவேல் ஆகியோர் விரைவாக கோவிலை நோக்கி ஓடினார்கள் .. போலீஸ் ஜீப் மற்றும் அவசர ஊர்தி ஆம்புலன்ஸ் பெரும் சப்தத்துடன் அவர்களை கடந்து சென்றது.
தலைமை காவல் அதிகாரி மற்ற காவல்துறை அதிகாரிகளிடம் செய்யவேண்டிய விவரங்களை கூறி அவர்களை அனுப்பிவிட்டு தனது முதல் அறிக்கை விவரங்களை திரட்ட தொடங்கினார், "முதலில் பார்த்தது யார்" என்று கேட்டபடி தனது குறிப்பு புத்தகத்தை திறந்தார். நண்பன் சுந்தர வடிவேளுவுடன் கிருஷ்ணனும் அவனது தங்கையும் அங்கு வந்து சேர்ந்தார்கள் ..... கிருஷ்ணனின் தங்கை ஒ வென்று அழுதபடியே செய்வது அறியாமல் தகைத்து நின்றால்,பாட்டு :- பிறக்கும் போதம் அழுகின்றார்-பாடியவர் -சந்திர பாபு. http://youtu.be/OslLZDX_rW0 இதற்கிடையில் மற்றுமொரு காவல் அதிகரி கை விரல் பதிவுகளை நகல் எடுக்க தொடங்கினார், மற்றும் சில அதிகாரிகள் புகைப்படம் எடுப்பதற்காக தங்களது காலணிகளை கழற்றிவிட்டு கோவிலின் கருவறைக்குள் சென்றனர், அவர்களில் ஒரு காவலர் அங்கு இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கும் பூசாரி நடராஜ அய்யரின் உடலை சுற்றி கொலக்கல்லால் படம் வரைய முற்பட்டார்.. அப்போது திடீர் என்று சார் சீக்கிரம் உள்ள வாங்க சார்... வந்து இங்க பாருங்க ..என்று உரக்க கத்தினார் ...சப்தம் கேட்டு அனைவரும் பதறிப்போனார்கள். கிருஷ்ணனும் அவனது நண்பனும் கோவிலின் உள்ளே செல்ல முற்ப்பட்டனர் .. அலறலைக்கேட்ட கிருஷ்ணனின் தங்கை மயக்கமாகி விழுந்தால்..., கோவிலின் உள்ளே செல்ல முப்பட்ட கிருஷ்ணனிடம் அவனது நண்பன் சுந்தரவடிவேல் தங்கையை கவனிக்கும்படி கூறு தான் மட்டும் கோவிலின் உள்ளே சென்று பார்பதாக கூறினான். பாடல் ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன், படம் -ஒளி விளக்கு http://youtu.be/FevCCrPz7Nc
நேயர்களே கோவிலின் உள்ளே சென்ற காவல் அதிகரி ஏன் அப்படி உரக்க சப்தமிட்டார், கோவிலின் உள்ளே அப்படி என்ன பார்த்துவிட்டார் ? என்ன நடந்திருக்கும்? ...உங்களின் எண்ணங்களை உடனே எங்களை அழைத்து பகிர்ந்துகொள்ளுங்களேன். பாட்டு :-ஒண்ணுமே புரியலே உலகத்திலே - Chandra Babu http://youtu.be/L0PIhl4LVrk
தலைமை காவல் அதிகரி மற்ற காவலர்களை நோக்கி... யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று கூறியபடி கோவிலின் உள்ளே ஓடினார் ..உள்ளிருந்து மேலும் சப்தம் வர வெளியில் வந்த ஒரு காவல் அதிகரி.. அங்கிருந்த மருத்துவ முதலுதவிக்குழுவை அவரசரமாக வரும்படி கட்டளையிட்டார் ..அவர்களும் ஒரு முதலுதவி படுக்கை விரிப்பை எடுத்துக்கொண்டு கோவிலின் உள்ளே ஓடினார்கள் .பாட்டு -வாழ்கை எனும் ஓடம் by K.B சுந்தரம்பாள்- படம் -பூம்புகார் - http://youtu.be/Wrk-BVzgy9s. இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பொது மக்கள் "என்ன ஆனதோ ..கடவுளே எது என்ன சோதனை என்று ஒருவருக்கொருவர் உரக்க பேசியபடியே செய்வதறியாது திகைத்து கோவிலின் கதவினை வைத்த கண் விலகாமல் வேடிக்கை பார்த்தபடியே என்ன ஆகப்போகிறதோ என்று காத்துக்கிடந்தனர். பாட்டு -நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் படம் -நெஞ்சில் ஒரு ஆலயம்http://youtu.be/HvTIQIi7e9I
கொவினுல்லிருந்து முதலுதவி படுக்கையை தூக்கி கொண்டு கூட்டமாக அனைவரும் வெளியில் வர.. " உயிர் இருக்காம் பா " என்கிற விவரம் தீ போல பரவியது ... வெளியில் வந்த நிலையில் நடராஜ அய்யர் முதலுதவி படுக்கையில்லிருந்து எழுந்து உட்கார முற்பட்டார். இதை பார்த்த மக்கள் அனைவரும் பெருமாளே நல்லபடியா காப்பதிட்டப்பா என்று உரக்க முழக்க மிட்டனர். பாட்டு :-ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை எழேழுபிரவிக்கும் எதற்கும் பயமில்லை Movie - Thirumalai Theivam திருமலைத் தெய்வம், Music - Kunnakudi Vaidyanathan குன்னக்குடி வைத்தியநாதன், Lyrics - Kaviyarasar Kannadasan கவியரசர் கண்ணதாசன், Actor & Singer - K.B.Sundarambal முருகனருள் கே.பி.சுந்தராம்பாள்.http://youtu.be/TNfbqL2R6bk
எனக்கு ஒன்றும் இல்லை என்று கூறியபடியே கோவில் அர்ச்சகர் நடராஜ அய்யர் மெல்ல பேச முர்ப்பட்டார் ..அப்போது தலைமை காவல் அதிகரி அவரிடம் நடந்த விவரங்களை கேட்க முற்பட்டார். மருத்துவர் ஒருவர் அவரிடம் தற்போதைய உடல்நிலை எப்படி உள்ளது என்றும் முதுகில் ஏற்ப்பட்ட காயத்தை பரிசோதனை செய்ய முற்பட்டார், அப்போது அருகில் வந்த காவல் துறை அதிகரி அர்ச்சகர் நடராஜன் அய்யரிடம் தனது முதல் அறிக்கை விவரங்களை சேகரிக்க முற்பட்டார் ..முதுகில் உள்ள கரு ரத்த காயம் எப்படி ,, என்ன நடந்தது என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்தார். அத்தனை கேள்விகளுக்கும் நடராஜ அய்யர், " இது எல்லாம் அவன் அருள் அன்றி வேறேதும் இல்லை என்றார்" பாடல் -குருவாயுரப்ப திருவருள் தருவாய் நீ அப்பா, உன் கோவில் வாசலிலே தினமும் திருநாள் தானப்பா, படம் - திருமலை தென்குமரி by Kunnakudi Vaidyanathan and sung by "Isai Mani" Dr Sirkazhi Govindarajan, from Movie -Thirumalai Thenkumari. http://youtu.be/wshuDEdPDTk
அங்கே மிகப்பெரிய நிசப்தம் நிலவியது கிருஷ்ணனும் அவனது நண்பனும் பூசாரியை கை தாங்களாக படுக்கையிலிருந்து எழ உதவினார்கள். சற்று எழுந்து நின்ற பூசாரி நடராஜ அய்யர் மெல்ல பேச தொடங்கினார் .பாடல் :-இது சத்யம் சொல்லப்போவது யாவும் உண்மை , சத்யம் இது சத்யம் -- நடிப்பு -ASOKAN .PAADAL -- KAVIARASAR KANNADASAN --- KURAL -- T M S" "என் மன பாரத்தை பெருமாளிடம் முறையிடலாம் என்று இரவு கோவிலுக்கு வந்து பார்க்கும் பொது சரியாக பூட்டப்படாமல் இருந்த கோவிலின் கதவை பார்த்த எனக்கு வேறு வழி தெரியாமல் கோவிலின் உள்ளே சென்று பார்க்கவேண்டிய நிர்பந்தமாயிற்று.. மேலும் கோவிலின் உள்ளே சென்ற நான் அங்கு நான் வருவது தெரிந்த இரண்டு உருவங்கள் என்மீது பாய்ந்து என்னை அடிக்க புறப்பட்டனர் அப்போது நான் கோவில் மணியை பிடித்து வேகமாக அடித்து அனைவரையும் கூப்பிடுவேன் என்று கூறியதும் அவர்கள் இருவரும் என்னை வேகமாக தள்ளிவிட்டு வெளியில் ஓடிவிட்டார்கள், இரண்டு நாளாக சரியாக சாப்பிடாமல் இருந்ததால் மயக்கமாகி விழுந்துவிட்டேன் பிறகு நடந்த எதுவும் எனக்கு தெரியாது என்றார் .. அப்படிஎன்றால் அவரின் முதுகின்மேல் இருந்த கரு இரத்தம் எப்படி வந்தது என்று சுற்றி இருந்தவர்கள் கேட்க .. பிறகு தான் அந்த உண்மை புரிந்தது ....! பாடல் -திருப்தி மலை வாழும் வெங்கடேச composed by Kunnakudi Vaidyanathan and sung by "Isai Mani" Dr Sirkazhi Govindarajan, from Movie -Thirumalai Thenkumari. http://youtu.be/yC1hSdCeQSc
இதற்கிடையில் மருத்துவர் பூசாரியின் முதுகில் இருந்த இரத்த காயத்தை துடைத்து காயத்தின் நிலையை பார்க்க முற்ப்பட்டபோது அதிர்ந்து போனார். காரணம் பூசாரியின் முதுகில் எந்த ஒரு சிறு காயமும் ஏற்ப்படவில்லை.. மருத்துவருக்கு மிகவும் ஆச்சிரியமாக இந்த கரு இரத்தம் எப்படி வந்தது என்று இரத்தத்தை துடைத்த பஞ்சிலிருந்து வரும் நாற்றத்தை கண்டு இது மனித இரத்தமே இல்லை என்கிற முடிவுக்கு வந்தார். மிகப் பழமைவாய்ந்த கோவில் என்பதாலும் கோவிலின் கருவறையில் ஏற்றப்படும் தீபம், சாம்பிராணி புகை மற்றும் கற்பூர புகை போன்றவை கருவறை மேற்புற சுவரில் படிந்து ..ஈர காற்று அந்த சுவற்றில் படும்போது கரு நிற அழுக்கு "பிசுக்கு" இரவு முழுது கிழே விழுந்து கிடக்கும் பூசாரியின் முதுகின் சொட்டி இருக்கிறது .அந்த கருமையான அழுக்கு பிசுக்கு தான் பார்பவர்களின் கண்களுக்கு கரு ரக்தம் போல தெரிந்தது. பாடல்- கல்லிலே கலைவண்ணம் கண்டான், படம்-பூம்புகார் , பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் http://youtu.be/EdysGi1bmJk
ஒரு பெரிய திருட்டை காப்பாற்றிவிட்டதர்க்கு பொதுமக்கள் அனைவரும் நடராஜ அய்யருக்கும் அவரது மகள் மற்றும் மகனுக்கும் அவர்களின் நன்றிகளை தெரியப்படுத்த்னார்கள், காவல்துறையும் அவர்களின் சார்பில் நன்றிகளை தெரியப்படிதியும் மேலும் அங்கு வந்த கொள்ளைக் கூட்டத்தைப்பற்றி விசாரணை செய்ய முற்ப்பட்டனர். இருவரின் முகம் தனக்கு சரியாக தெரியவில்லை இருப்பினும் அவர்களிடமிருந்து சந்தன வாசம் வந்தது என்று குறிப்பிட்டார். எதோ ஒரு பெரிய மழை பெய்து நின்றது போல நிம்மதி அடைந்தவர்களாக அனைவரும் களைந்து அவரவர்களின் வேலையை பார்க்க அவரவர் செல்லவேண்டிய இடம் நோக்கி சென்றார்கள் .பாடல் :-அமைதியான நதியினிலே ஓடம் - படம் -ஆண்டவன் கட்டளை http://youtu.be/lviVOSU-h8U
அன்று மாலையில் காவல்துறை வாகனம் நடராஜ அய்யரின் வீட்டின் முன்பு வந்து நின்றது, இதை அறிந்த அருகில் குடியிருந்த அனைவரும் அவரின் வாசலில் கூடிவிட்டனர், வாகனத்திலிருந்து இறங்கிய காவல்துறை அதிகரி நாடராஜா அய்யரைப்பார்த்து, அந்த இரு திருடர்களும் பிடிபட்டதொடு அவர்களின் கூட்டமும் பிடிபட்டதாக கூறினார், அதோடு அவர்கள் அனைவரும் தேடப்பட்டுவரும் குற்றவாளிகள் என்றும் அவர்களைப்பற்றி துப்புகொடுப்பவர்களுக்கு அரசு ஐந்து லட்சம் பணம் பரிசாக அறிவித்திருந்ததால் அந்த பரிசுத்தொகை நடராஜ அய்யருக்கு கிடைக்கபோவதவும் அறிவித்தார்.அதைக்கேட்டதும் அனைவருக்கும் மிகுந்த சந்தோசத்தில் மிதந்தார்கள் பாடல் :- சந்தோசம் சந்தோசம் வாழ்கையில் பாதி பலம் ,படம் -யூத் http://youtu.be/fK1WcVE1ppQ

பரிசுத்தொகை ஐந்து லட்சம் பணம் கிடைக்கின்றபடியால் தனது மகளின் திருமண செலவுகளுக்கு அது போதுமானது என்கிற மகிழ்ச்சியில், நடராஜ அய்யரின் மனதில் ஒளிமயமான ஒரு எதிர்காலம் தெரிய ஆரம்பித்தது பாடல்:-ஒளிமயமான எதிர்காலம் - படம் பச்சை விளக்கு http://youtu.be/பொட௦ஷ௬ட்ஜ்ப
நேயர்களே சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது, 'எங்கு சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை அது " காத்திருங்கள் இந்த தொடர், இன்னும் தொடர்ந்து வரும் ..மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் வணக்கம். பாடல்:- சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது

No comments:

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.